அப்படியா? உங்களுக்கு சொன்னாங்களா? துணை முதல்வர், விஜய் அரசியல் - உதயநிதி பேட்டி! - Seithipunal
Seithipunal


அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் 1 மணி நேரத்திற்கு மேலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு மாற்றம் ஒன்றே மாறாதது என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகின.

மேலும், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து தான் அறிவாலயத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதியிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்க்கு பதிலளித்த உதயநிதி, "அப்படியா? உங்களுக்கு சொன்னாங்களா? துணை முதல்வர் பதவி குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுப்பார்.

தொண்டர்கள், நிர்வாகிகள் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளன. இது முழுக்க முழுக்க முதலமைச்சரின் தனிப்பட்ட முடிவாக இருக்கும். என்றைக்குமே எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக தான் இருப்போம்." என்று தெரிவித்தார். 

நடிகர் விஜயின் அரசியல், பெரியார் சிலைக்கு மரியாதையை செய்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, யாராக இருந்தாலும் பெரியாரை தாண்டி அரசியல் செய்ய முடியாது, பெரியாரைத் தொடாமல் இங்கு அரசியல் செய்ய முடியாதுவிஜய்க்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தார்.


இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த சீமான் தெரிவிக்கையில், "விஜய் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, எங்களால் தான் மற்றவர்களுக்கு பாதிப்பு. தேசிய இனத்திற்கு தலைமை ஏற்று இருக்க வேண்டும் என்றால் திரைத்துறை மட்டும் பத்தாது, துணிவு வேண்டும்" என்று சீமான் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MKStalin UdhayanidhiStalin deputy cm


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->