மகன் மீது பாய்ந்த வன்கொடுமை வழக்கு.. பதறிப்போன திமுக எம்எல்ஏ கருணாநிதி... அவசர அவசரமாக விளக்கம்.!!
DMK MLA karunanidhi explain about his son and daughter in law case
வீட்டுக்கு வேலைக்கு வந்த பட்டியலின பெண்ணை கொடுமைப்படுத்திவதாக பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆட்டோ அவருடைய மனைவி மெரினா மீது ஐந்து பிரிவுகளின் கீழ் நீலாங்கரை மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய புகாரின் அடிப்படையில் பட்டியல் இன மக்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், குழந்தை பாதுகாப்பு சட்டம், ஆபாசமாக பேசியது, தாக்கியது, மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து திமுக எம்எல்ஏ கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். என் மகனும் திருமணம் ஆகிய 7 ஆண்டுகளாக திருவான்மையூரில் தனியாக வசித்து வருவதாகவும், அங்கு என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு தெரியாது எனவும் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என தெரிவித்துள்ள கருணாநிதி மருமகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவர்கள் அதை எடுப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
English Summary
DMK MLA karunanidhi explain about his son and daughter in law case