நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டுகிறதா திமுக.? வைரலாகும் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


கடந்த டிசம்பர் 4ம் தேதி சென்னையை நெருங்கிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக அனைத்து ஏரிகளும் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டதால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிவாரண மற்றும் மீட்பு பணிகளைத் தொடர்ந்து தற்போது சென்னை இயல்பு நிலைக்கு திருமபி வருகிறது. இருப்பினும் சில பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியவில்லை.

இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதால் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் நிவாரண பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தனியார் நிறுவனம் வழங்கிய நிவாரண பொருட்கள் மீது திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக மாதவரம் தொகுதி திமுக எம்எல்ஏ சுதர்சனம் தொண்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் வழங்கும் நிவாரண பொருட்களின் மீது திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் சமூக வலைதள வாசிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA put stickers on Chennai floods relief items


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->