எஸ்பி வருண்குமார் vs சீமான் விவகாரம்: கனிமொழி போட்ட பரபரப்பு டிவிட்! - Seithipunal
Seithipunal


திருச்சி எஸ்பி வருண்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சீமான் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு பக்கம் அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை எஸ்பி வருண்குமார் கைது செய்து வரும் நிலையில், இந்த வழக்கு, கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சப் போவதில்லை, சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார், நேரடியாக என்னுடன் மோத தயாரா என்றும் வருண்குமார் எஸ்பி வருண்குமாருக்கு சவால் விட்டுள்ளார். 

அவதூறு வழக்கில் திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் செல்போனில் இருந்த ஆடியோக்கள், திமுகவின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் சமூகவலைத்தளங்களில் பதிவிட, இதற்க்கு காரணம் எஸ்பி வருண்குமார் தான் என்று நாம் தமிழர் கட்சி தொண்டர்கள், வருண்குமாரின் எல்லை மீறி குடும்ப உறுப்பினர்களை எல்லாம் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து வருண்குமார் அளித்த புகாரின் பேரில் இதுவரை 4 பேரை தில்லை நகர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், திமுக எம்பி கனிமொழி இந்த விவகாரத்தில், புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "பெண்கள் எந்த துறையில் இருந்தாலும், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், அவர்கள் சார்ந்த ஆணை இழிவு செய்யும் வண்ணம், அந்த பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும், அறுவெறுக்கத்தக்க முறையில் பிரச்சாரம் செய்வதும் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத இழிச்செயல். 

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே IPS மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இணையவழி ஆபாச தாக்குதல் நடத்தி வரும் அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு சக பெண்ணாகவும், சமூக அக்கறை உள்ள நபராகவும் திருமிகு. வந்திதா பாண்டே IPS அவர்களின் கரம்பற்றி எனது ஆதரவையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP Kanimozhi Support to Pudukottai SP


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->