திமுக பட்டியலின நிர்வாகி முகத்தில் காரி துப்பிய திமுக நிர்வாகி! அதிர்ச்சி வீடியோ!
DMK Nagai Murugesan video BJP Condemn
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த முருகேசன் தி.மு.க ஆதிதிராவிடர் மாவட்ட தலைவர் உள்ளார்.
இவர் ஆதிதிராவிடர் மக்களின் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி திமுகவின் ஒன்றிய செயலாளர் உதய முருகையன் இடம் கோரிக்கை வைத்து உள்ளார்.
அப்போது முருகையன், தன்னை ஆதிதிராவிடராவது -வது, போடா நாயே என்று கூறி முகத்தில் காறி துப்பி அனுப்பியதாக முருகேசன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து தி.மு.க மாவட்ட செயலாளர் மீன்வளத்துறை தலைவர் கௌதமன் மற்றும் சென்னை தி.மு.க அறிவாலய அலுவலகத்தில் சென்று புகார் அளித்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் முருகேசன் தெரிவித்துள்ளார்.
இந்த காணொளியை பகிர்ந்துள்ள பாஜக நிர்வாகி சூர்யா, "நாகை மாவட்ட தி.மு.க ஆதிதிராவிடர் தலைவர் முகத்தில் காறி துப்பிய தி.மு.க ஒன்றிய செயலாளர். பேச்சுக்கு பேச்சு சமூக நீதி ஆட்சி என்று வாய் பந்தல் போட்ட பொம்மை முதல்வர் ஸ்டாலின் இதற்கு என்ன பதில் செல்வார்? திராவிடமாடல் ஆட்சி லட்சணம் இதுதானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
DMK Nagai Murugesan video BJP Condemn