அண்ணாமலையின் பாசாங்கு தமிழகத்தில் பலிக்காது.! ஆர்.எஸ் பாரதி கண்டனம்.!
dmk rs bharathi condemns bjp state president annmali double standard about migrant workers
வட மாநிலத் தொழிலாளர்களின் விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரட்டை வேடம் போடுவதாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார் ஆர்.எஸ் பாரதி.
அந்த அறிக்கையில் தமிழகத்திலிருக்கும் அனைத்து மாநில தொழிலாளர்களும், பாதுகாப்புடனும், நலமுடனும் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். பாஜகவின் வெறுப்பு அரசியல் தமிழக மண்ணில் எடுபடாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் ஆற்றல்மிகு நிர்வாக திறமைக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் பாஜக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களின் மூலம் போலியான வீடியோக்களை பரப்பி மக்களிடம் வெறுப்பை விதைக்கின்றனர் எனவும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டி இருக்கிறார்.
திமுகவின் நிலைப்பாடு என்பது இந்தி திணிப்புக்கு எதிரானது தானே தவிர இந்தி பேசும் மக்களின் மீதான வெறுப்பு அல்ல என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆர்.எஸ் பாரதி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாமலை மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
dmk rs bharathi condemns bjp state president annmali double standard about migrant workers