சிறுமைப் படுத்தாதீங்க விஜய்! யார் உண்மையான குற்றவாளிகள்? திமுக சரவணன் பதிலடி! - Seithipunal
Seithipunal


வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தி இருந்தார்.

மேலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிசிஐடி ஏற்கெனவே விசாரணை நடத்தி, கால தாமதமாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும். இது வேங்கை வயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது என்று விஜய் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், திமுகவின் செய்தி தொடர்பாளர் சரவணன், விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதில், "விஜய் அண்ணா என்ன சொல்ல முற்படுகிறார், 

விசாரணை முடிவுகள்  ஏற்புடையதல்ல என்கிறார்? 
யாருக்கு ஏற்புடையதல்ல? 
அரசியல் கட்சிகளுக்கா? 

ஒரே கேள்வியைத் தான் மீண்டும் மீண்டும் கேட்கிறோம், யார் உண்மையான குற்றவாளிகள்? உங்களுக்கு ஏதேனும் தகவல் தெரியுமா? 

நீங்கள் அரசியல் செய்வதற்கு விசாரணை முடிவுகள் உதவவில்லையென்றால் மீண்டும் விசாரணை நடத்த வேண்டுமா? 

யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை! 
திறமையான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்திருக்கின்றனர் தமிழக போலிசார். 
பாராட்ட மனமில்லையென்றாலும் பரவாயில்லை அவர்களின் முயற்சிகளை சிறுமை படுத்தாதீர்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Saravaran condemn to TVK Vijay Vengaivayal issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->