அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக முடியாது...! - மகேஷ் பாபு அனுப்பிய கடிதம்
Unable to appear Enforcement Directorate investigation Mahesh Babu letter
தெலுங்கு நடிகர் 'மகேஷ்பாபு' ஐதராபாத்தில் இயங்கி வரும் 'சூரானா குழுமம்' மற்றும் 'சாய் சூர்யா டெவலப்பர்ஸ்' நிறுவன விளம்பரங்களில் நடித்தார்.இவர் நடித்து கொடுத்த பில்டர்ஸ் நிறுவனம் மக்களை ஏமாற்றியுள்ளதாக சில வாரங்களுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர்களின் நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடித்ததால் 'அமலாக்கத்துறை' மகேஷ் பாபு அவர்களுக்கு சம்மனை அனுப்பியது. நடிகர் மகேஷ்பாபு இந்த விளம்பர படத்தில் நடிப்பதற்காக சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவனத்திலிருந்து ரூ.5.90 கோடி பெற்றார்.
இதில் ரூ.2.50 கோடி ரொக்கமாகவும், மீதமுள்ள பணம் வங்கிக் கணக்கில் பெறப்பட்டது குறித்து நடிகர் மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இதில் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் விசாரணைக்கு தற்போது ஆஜராக முடியாது என மகேஷ்பாபு அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மகேஷ்பாபு:
அதில்,'முன்னரே தீர்மானிக்கப்பட்ட அட்டைவனையின்படி சினிமா படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் இன்று விசாரணைக்கு ஆஜராக முடியாது. விசாரணைக்கு ஆஜராக வேறு ஒரு தேதியை அறிவிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.இது தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Unable to appear Enforcement Directorate investigation Mahesh Babu letter