கரூர் கும்பல் + வசூல் வேட்டை! செந்தில்பாலாஜி அமைச்சராக்கப்பட்டது ஏன் என்று இப்போ புரியுதா? பாஜக தரப்பில் கடும் கண்டனம்!
DMK Senthilbalaji Karur Gang TASMAC Bar BJP
கோவையில் டாஸ்மாக் பார் நடத்துபவர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவம், மது விற்பனை தமிழகத்தின் பணம்கொழிக்கும் இயந்திரம் என்பதை இது உணர்த்துவதாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "கோவையில் டாஸ்மாக் பார் நடத்துபவர்கள் மீது கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது கரூர் கும்பல் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈஸ்வரமூர்த்தி என்ற நபர் இந்த கும்பலின் தலைவனாக அடியாட்களை வைத்து வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடு.
பார்கள் முறையாக நடக்கின்றனவா? சட்டப்படி செயல்படுகின்றனவா என்பதே கேள்விக்குறியாக இருந்தாலும், அரசியல்வாதிகள் தான் பார் வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற போதிலும், அவர்களையே மிரட்டுவது என்பது 'டாஸ்மாக்' வியாபாரத்தின் கொடுமையை, கொடூரத்தை வெளிக்காட்டுகிறது.
மது விற்பனை தமிழகத்தின் பணம்கொழிக்கும் இயந்திரம் என்பதை இது உணர்த்துகிறது.
பிணையில் இருக்கும் செந்தில் பாலாஜி அவர்களை மீண்டும் அவசரம் அவசரமாக அமைச்சராக்கியது ஏன் என்று புரிகிறதா? என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
DMK Senthilbalaji Karur Gang TASMAC Bar BJP