மானம், ஈனம், சுயமரியாதை எல்லாம் இருக்க கூடாது, எனக்கெல்லாம் இது பழகிப் போய்விட்டது - திமுக டி ஆர் பாலு தேர்தல் பரப்புரை.!
dmk tr balu election campaign 2022
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். சுயச்சை வேட்பாளர்களும், அரசியல் கட்சி வேட்பாளர்களும் தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர்.
அந்த வகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் திமுகவின் பொருளாளர் டி ஆர் பாலு இன்று காஞ்சிபுரம் மாவட்டம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தெரிவிக்கையில்,
"இந்தத் தேர்தலில் தங்களுக்கு சீட்டு கிடைக்கவில்லை என்று என்னை திட்டுகிறார்கள். நிர்வாகிகள் எப்பவும் மாலை மாலை மட்டும் போட்டுக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்க கூடாது.
ஆனால், அடிக்காத வரைக்கும் .,காயம் படாத வரைக்கும் சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள். நான் மாவட்ட செயலாளராக இருந்தபோது., எத்தனை அடி வாங்கி இருப்பேன்., எவ்வளவு உதைப்பட்டிருப்பேன் தெரியுமா?
மானம், ஈனம், சுயமரியாதை எல்லாம் இழந்து விட்டு வந்தால் தான், கட்சியில் நிர்வாகியாக இருக்க முடியும். எனக்கெல்லாம் இது பழகிப் போய்விட்டது" என்று டிஆர் பாலு தெரிவித்தார்.
டிஆர் பாலுவின் இந்த வெளிப்படையான பேச்சு, அரசியல் கட்சிகள் மத்தியிலும், சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
English Summary
dmk tr balu election campaign 2022