கூட்டணி கட்சிகாரர் கைவிட்டால் தி.மு.க வீழ்ந்து விடும் - எடப்பாடி பழனிசாமி!
Dmk will fall if the alliance party leaves edappadi palaniswami
சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் இன்று அ.தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடுத்து வரும் தேர்தல்தான் உண்மையான தேர்தல் என்று கூறியதாக கூறிய அவர், அந்த பைனல் மேட்சில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும் என்றும், விளையாட்டை ஆரம்பிச்சுட்டீங்க என்று தெரிவித்த அவர், அந்த விளையாட்டு வெற்றியினுடைய கோப்பையை அ.தி.மு.க. தான் பெறும் என்று தெரிவித்தார்.
மேலும், தி.மு.க.வில் நிறைய கூட்டணி கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் தி.மு.க.வை பிடித்து கொண்டிருக்கிறார்கள். இதில் மேலே இருக்கிற கூட்டணி கட்சி தலைவர் கையை விட்டால் கடைசியில் இருக்கிற தி.மு.க.வின் கதி என்னாவது என்று கேள்வி எழுப்பி அவர், அவ்வாறு தான் தி.மு.க.வின் நிலை தற்போது நிலவுவதாக கூறினார்.
கூட்டணி கட்சிகாரர் கைவிட்டால் தி.மு.க. வீழ்ந்து போய் விடும். ஆனால் அ.தி.மு.க. வெற்றி, தோல்வி மாறி மாறி சந்தித்த கட்சி என்று தெரிவித்தார்.
English Summary
Dmk will fall if the alliance party leaves edappadi palaniswami