நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு தேர்தலில், திமுக திருச்சி சிவா முதலிடம்.!  - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொதுக்கணக்கு குழு தேர்தலில் 42 வாக்குகளை பெற்று திருச்சி சிவா முதலிடத்தில் வென்றுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பொதுக்கணக்குக் குழுவின் 7 இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் எட்டு பேர் போட்டியிட்டனர். இதில் திமுக மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா அதிக வாக்குகளை பெற்று முதல் இடத்தில் இருக்கின்றார்.

திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, 42 வாக்குகளும், மேலும், போட்டியிட்ட பாஜக சார்பில் டாக்டர் சுதன்சு திரிவேதி 34 வாக்குகளும், கன்ஷியாம் திரிவேதி மற்றும் டாக்டர். லக்ஷ்மன் ஆகியோர் 29 வாக்குககளும் பெற்றுள்ளனர்.

மேலும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சக்தி சிங் கோஹில் 31 வாக்குகளும், அதிமுக கட்சியைச் சேர்ந்த தம்பிதுரை 16 வாக்குகளும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுகேந்து சேகர் ராய் 17 வாக்குகளும் பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK's Trichy Siva tops in Parliamentary Public Accounts Committee election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->