பிரதமர் அளவுக்கு என்னை உயர்த்தி கூறியிருந்தால் பரவாயில்லை; குறைத்து மதிப்பிடாதீர்கள்; திருமாவளவன் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


தன்னை குறைத்து மதிப்பீட்டு விமர்சனம் செய்து வருகின்றனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். 

தன்னை பிரதமர் என்ற அளவுக்கு என்னை குறித்து கூறியிருந்தால் பரவாயில்லை. ஆனால், "துணை முதல்வர் பதவி கேட்கிறார்" என விமர்சிக்கின்றனர்.

இதனை சென்னை வள்ளுவர் கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது  திருமாவளவன் கூறியுள்ளார்.

"அம்பேத்கரை இழிவுபடுத்தியதில் இருந்தே பாஜகவின் அழிவு ஆரம்பித்து விட்டது. அம்பேத்கரை அறிவதற்கும் படிப்பதற்கும் அறிவும் ஞானமும் தேவைப்படும். அவற்றை புரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு ஞானம் இல்லை. அவர்களுக்கு தெரிந்தது ஒன்றுதான்; அவர் பட்டியல் இனத்தவர்," என்று திருமாவளவன் கூறினார்.

அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் அவரை யாரும் எளிதில் ஏற்கவில்லை. ஆனால் பல்வேறு இன்னல்களுக்கு பின், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றி, அனைவருக்கும் ஆன ஜனநாயக உரிமையை பெற்று தந்தார்," என்றும் அவர் மேலும் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில்  "பிரதமர் என்ற அளவுக்கு என்னை உயர்த்தி கூறியிருந்தால் பரவாயில்லை. ஆனால், 'அங்கு தாவுகிறார், இங்கு தாவுகிறார், துணை முதல்வர் பதவி கேட்கிறார்' என என்னை குறைத்து மதிப்பீட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்," என்றும் அவர் பேசியது தற்போது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

do not underestimate me Thirumavalavan is a stir


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->