#கடலூர் || வெளியான செய்தியால் மன வேதனையில் பாமக தலைவர்.! சோகத்தில் மூழ்கிய கடலூர் மாவட்டம்.!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த ஏ.குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த 4 சிறுமிகள் உட்பட 7 பேர் கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்று, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சிறுமிகள் உட்பட 7 பேரும் நீரில் மூழ்கிதாகவும், மயங்கிய நிலையில் அவர்களை மீட்ட ஊர் பொதுமக்கள் மருத்துமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கெடிலம் ஆற்றில் மூழ்கி 4 சிறுமிகள் உட்பட 7 பேர் மரணத்துக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் இரங்கல் செய்தியில், "கடலூர் மாவட்டம்  நெல்லிக்குப்பத்தை அடுத்த ஏ.குச்சிப்பாளையத்தில் உள்ள கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்ற 4 சிறுமிகள் உள்ளிட்ட 7 பேர்  நீரில் மூழ்கி உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்!

தடுப்பணை கட்ட  தோண்டப்பட்ட பள்ளங்கள்  நிரப்பப்படாதது தான்   உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


(பள்ளி கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை நீர்நிலை அருகில் போக கூடாது என்று கண்டிக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் பெற்றோர் இந்த கோடைகால விடுமுறையில் பிள்ளைகள் எங்கே செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டிய தருணம் இது)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Mourning to kuchipalayam Accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->