"ஏரிகள் மீட்சி, சோழர்கால ஆட்சி" - அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி!
Dr Anbumani Ramadoss Say About Chola Water management
"ஏரிகள் மீட்சி சோழர்கால ஆட்சி" என்ற கொள்கை முழுக்கத்துடன் அரியலூர் - சோழர் பாசன திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தி, பா.ம.க தலைவர் மருத்துவ அன்புமணி இராமதாஸ் பிரச்சார எழுச்சி நடைப்பயணத்தை இன்று தொடங்கியுள்ளார்.
அரியலூர் - கீழப்பழுவூரில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி இராமதாஸ் தெரிவித்தாவது, "சோழர்கள் காலத்தில் அரியலூர் மாவட்டம் மிக செழுமையாக இருந்தது. இடைக்காலத்தில் ஏரிகள் எல்லாம் தூர்ந்து, வாய்க்கால்கள் அனைத்தும் காணாமல் போனதால், இன்று வறண்ட மாவட்டமாக அரியலூர் மாவட்டம் மாறி உள்ளது.
கொள்ளிடத்தில் தென்பகுதி மிகச் செழுமையான பகுதியாக இன்றும் இருக்கிறது. வடக்கு பகுதி வறட்சியான பகுதியாக இருக்கிறது. 18 டிஎம்சி நீர் அரியலூர் மாவட்டத்திற்கு தேவைப்படுகிறது. ஆனால் தற்போது உள்ள ஏரிகள் தூர்வராமல் உள்ளதால் 8 டிஎம்சி அளவு மட்டுமே நீர் தேக்கி வைக்க முடிகிறது.
செம்பிய மாதேவி ஏரி, கரைவெட்டி ஏரி, பொன்னேரி போன்ற ஏரிகள் எல்லாம் இந்த மாவட்டத்தில் இருக்கிறது. ஆனால், அதில் நீர் கிடையாது. தூர்ந்து போய் கிடைக்கின்றன. இதனை மீட்டெடுக்க வேண்டும். இதற்கு மொத்த செலவு 2700 கோடி ரூபாய் ஆகும்.
கொள்ளிடம் ஆற்றில் மூன்று இடத்தில் தட்டுப்பனைகளை கட்ட வேண்டும். அதிலும் குறிப்பாக வாழ்க்கை-தூத்தூர் பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கு ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
அந்த காலத்தில் சோழர்கள் மிகப்பெரிய அளவிற்கு பாசன திட்டத்தை கொண்டு வந்தார்கள். ஆங்கிலேயர்கள் இந்த திட்டத்தை கையில் எடுத்து, வரவரை செய்தார்கள். ஆனால் அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. இப்போது உள்ள இந்த அரசு இதனை நிறைவேற்ற வேண்டும் என்பது ஆழமான கோரிக்கை. அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என்று அனபமணி இராமதாஸ் தெரிவித்தார்.
English Summary
Dr Anbumani Ramadoss Say About Chola Water management