நடிகர்கள் இனி அப்படி நடிக்க வாய்ப்பே இல்லை! அடித்து கூறும் அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


இன்று திருவள்ளூரில் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில், "ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு இனி நடிகர்கள் விளம்பரம் செய்ய முடியாது. அவர்கள் தங்களின் மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும். 

ஒரு குடும்பமே நாசமாகிக் கொண்டிருக்கும் போது, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீதிக்கு வந்துள்ள நிலையில், ஒரு வருடத்தில் 28 பேர், கடந்த நான்காண்டுகளில் 80க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டிருக்கும்போது, மனசாட்சியுடன் நடிகர்கள் செயல்பட வேண்டும். நடிகர்கள் மட்டுமல்ல யாராக இருந்தாலும் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை முடிவு சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் வேண்டும். அதில் மாற்று கருத்து கிடையாது. இது சம்பந்தமாக ஆறு முறை நாங்கள் அறிக்கை வெளியிட்டிருக்கிறோம். அது எங்கே அமைப்பது என்பது தான் இப்போது இருக்கிற சர்ச்சை. பரந்தூர் பகுதியில் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்கு பதில், திருப்போரூர் பகுதியில் அரசு நிலங்கள் அதிகம் உள்ளது. 

ஹார்பர் பக்கத்திலேயே அந்த நிலம் கிடைக்கிறது. அந்த நிலத்தில் விமான நிலையம் கொண்டு வரலாம். அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை. யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது. ஆனால் அங்கு கல்பாக்கம் இருப்பதால் விமான நிலையம் கொண்டுவர முடியாது என்கிறார்கள். அதே சமயத்தில் விவசாயத்தை அழித்து, சுற்றுச்சூழலை அழித்து வளர்ச்சி என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். 

சென்னை மழை நீர் வடிகால் பணிகளை பொருத்தவரை உங்களுக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். என்னுடைய வீடு திநகர் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மழை நீர் வடிகால் வாய்க்காலை உடைத்து புதிதாக உருவாக்கினார்கள். 

இப்போது ஆறு மாதத்திற்கு முன்பு பார்த்தால், மீண்டும் அதனை உடைத்து புதிதாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள். என்ன காரணம்? என்று கேட்டால்? அந்த வாய்க்காலுக்கு இணைப்பு இல்லை என்று சொல்கிறார்கள். இதில் யார் ஒப்பந்ததாரர்? இதற்கு எந்த அதிகாரி அனுமதி கொடுத்தார்? அந்த அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும். இப்படி பத்து அதிகாரிகளை பணி நீக்கம் செய்தால், மற்றவர்களுக்கு பயம் வரும். 

அரசு அதிகாரிகள் பணத்தை வாங்கிக்கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இணைப்பே இல்லாமல் மழை நீர் வடிகால் அமைப்பது என்பது குற்ற செயல். இதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மழைநீர் வடிகால் பணியை பொறுத்தவரையில் 15 நாட்களில் முடிக்க கூடிய அளவுக்கு நம்மிடம் டெக்னாலஜி உள்ளது. சேட்டிலைட் மேப் உள்ளது, எந்த பகுதியில் நீர் தேங்குகிறது என்பதை கண்காணிக்க முடியும், அந்த பகுதிக்கு தேவையான அளவுக்கு, மழை நீர் வடிகால் பணிக்கு உண்டான கான்கிரீட் ரெடிமேட் ஸ்லாப்புகள் தயாரித்து உடனடியாக பணியை மேற்கொள்ள முடியும். தமிழகத்தின் சில பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக மழை நீர் வடிகால் பணி, பாதாள சாக்கடை திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதை எல்லாம் கைவிட்டுவிட்டு, நவீனமான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About Online Rummy Add Actor 112022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->