ஆன்லைன் சூதாட்டத்தை தடை அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு Dr. அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


தொடர்கதையாகும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்...  அரசு ஆபத்தை உணர வேண்டும்... ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று, பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த குரும்பட்டியைச்  சேர்ந்த வெங்கடேஷ் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது.  அவரது  குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்.

வெங்கடேஷையும் சேர்த்து தமிழ்நாட்டில் கடந்த 9 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்திருக்கிறது.  எந்த சமூகக் கேடுகளையும் விட அதிக உயிர்ப்பலி வாங்கும் கேடாக ஆன்லைன் சூதாட்டம் உருவெடுத்துள்ளது!

ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்யவில்லை என்றால், ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் தினசரி நிகழ்வுகளாகி விடக் கூடும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. அத்தகைய நிலை ஏற்படுவதை அரசு தடுக்க வேண்டும்!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் ஆபத்தானது.  இத்தகைய அலட்சியப் போக்கை கைவிட்டு, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய உடனடியாக அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும். அதன் மூலம் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About Online Rummy Game suicide issue Dharmapuri


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->