தரம் இல்லாத கல்வியை கொடுக்கும் திராவிட ஆட்சிகள் - அன்புமணி இராமதாஸ் காட்டம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தரம் இல்லாத கல்வியை திராவிட ஆட்சிகள் கொடுத்து வருவதாக, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

இன்று திருவாரூரில் மழையால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டபின், செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி இராமதாஸ் தெரிவித்தாவது, "டெல்டா பகுதியில் விவசாயிகளின் பெரும் உழைப்பால் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், காலம் தவறி பெய்த கன மழையால் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், டெல்டா பகுதியில் நெல்லை கொள்முதல் செய்யும் பொழுது ஈரப்பத நெல்லிற்கு விலக்கு பெற்று, கொள்முதல் செய்ய வேண்டும் என்று, விவசாயிகளின் சார்பாக கோரிக்கை வைக்கிறேன்.

ஈரோடு இடைத்தேர்தலால் ஆட்சியோ, வேற எதுவுமோ மாறிவிடப் போவதில்லை. நான் விவசாயிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைப் பெற்று, இவர்களுக்கு நிவாரணம் தர வேண்டும் என அரசை வலியுறுத்த வந்திருக்கிறேன். 

கடந்த காலங்களில் பூரண மதுவிலக்கு என்பது பற்றி மிக தீவிரமாக பேசிய முதலமைச்சர், தற்போது எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். மீதம் உள்ள மூன்றரை ஆண்டுகளில் மது கடைகளை மூடுவார்களா? மதுவிலக்கு கொள்கையை மறந்து விட்டார்களா? என்பதையும் முதலமைச்சர் தான் தெளிவுபடுத்த வேண்டும்.  

அதிமுக உட்கட்சி பிரச்சினை, அதை பற்றி அவர்கள் தான் கருத்து சொல்ல வேண்டும். நாங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை

2026 சட்டமன்றத் தேர்தல் தான் எங்களுடைய இலக்கு. அதற்கு ஏற்ப 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்களை அமைப்போம். தேர்தலுக்கு ஆறு மாதத்திற்கு முன்பு அது தொடர்பாக எங்களுடைய நிலைப்பாட்டினை அறிவிப்போம்" என்றார்.

அப்போது செய்தியாளர்கள் மருத்துவம், கல்வி இரண்டும் எனது இரண்டு கண்கள் என முதலமைச்சர் கூறியது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்க்கு, "சுகாதரத்துறை அமைச்சர்  சுப்ரமணியன் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். இருந்தாலும் கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணி நீக்கும் முடிவு என சில குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. 


 

கல்வியைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் ஒற்றை ஆசிரியர்களை கொண்ட 4500 தொடக்கப் பள்ளிகள் இருக்கின்றன. அடித்தளம் இல்லாமல் உருவாக்கப்படும் மாணவர்கள் எதனை நோக்கி செல்வார்கள்? அந்த மாணவர்கள் எவ்வாறு பிற்காலத்தில் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வார்கள்? தரம் இல்லாத கல்விதான் திராவிட ஆட்சிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறது. 

கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் கடலில் அமைக்க வேண்டும் என்பதை நாங்கள் ஏற்கவில்லை.  வேண்டுமென்றால் அவருடைய நினைவிடத்தில் அமைக்கலாம். கடல் என்பது சுற்றுச்சூழல் சார்ந்த பகுதி. கடலில் இன்று ஒரு நினைவு சின்னம் வைத்தால், நாளை மற்றொருவர் சின்னத்தை வைக்க வேண்டும் என வரிசையாக வந்து கொண்டிருப்பார்கள். இது தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும். 

எனவே, நினைவுச் சின்னத்தை அவருடைய நினைவிடத்தில் வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say about TN School Education 04022023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->