ராஜஸ்தானில் 3 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது: மீட்பு பணிகள் தீவிரம்!
3 year old child falls into borewell in Rajasthan Rescue operations in full swing
ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்பூட்லி நகரம் அருகே உள்ள சரூந்த கிராமத்தில் 3 வயது பெண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. இந்த ஆழ்துளை கிணறு சுமார் 700 அடி ஆழத்தில் பாசனத்திற்காக தோண்டப்பட்டு, நீண்டகாலமாக மூடப்படாமல் திறந்த நிலையில் இருந்தது.
குழந்தை அங்கு விளையாடிக்கொண்டிருந்தபோது, கண்காணிப்பின்றி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.
திடீரென குழந்தையின் குரலைக் கேட்டு, அருகிலிருந்தவர்கள் சம்பவத்தை கண்டறிந்து தியணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்ததும், தியணைப்பு வீரர்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.ஆழ்துளை கிணற்றின் உள்ளமைவை மதிப்பீடு செய்து, குழந்தையை மீட்க பல்வேறு தொழில்நுட்ப உதவிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
குழந்தை உள்ள இடத்தை துல்லியமாக கண்டறிந்து, அதற்கேற்ற விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிராம மக்கள் மற்றும் குழந்தையின் பெற்றோர் பதற்றமான நிலையில் மீட்பு நடவடிக்கையை கண்காணித்து வருகின்றனர்.அருகிலுள்ள மருத்துவ குழுவும் அவசர சிகிச்சைக்காக தயாராக உள்ளது.
இந்த சம்பவம் திறந்த நிலையில் கிணறுகளை கட்டமைப்பது மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாததன் தீவிரத்தை மீண்டும் முன்வைக்கிறது.
குழந்தையின் பாதுகாப்பிற்காக அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மீட்பு பணிகள் விரைவாக முடியும் என்ற நம்பிக்கையில், அனைவரும் அவதானமாக செயல்படுகிறார்கள்.
English Summary
3 year old child falls into borewell in Rajasthan Rescue operations in full swing