செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும், தன்னார்வலர்களுக்கும் பாராட்டுகள் - பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்.!  - Seithipunal
Seithipunal


பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "சென்னையில் நேற்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. தமிழர்களின் கலாச்சாரம், விளையாட்டுகள் தோன்றிய வரலாறு,  தமிழர்களின்  வலிமை ஆகியவை  தத்ரூபமாக சித்தரித்துக் காட்டப்பட்டன. ஒட்டுமொத்த உலகமும் இதை பார்த்து அறிந்தது!

சென்னையில்  நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்கவிழாவும்,  மாமல்லபுரத்தில் நடந்த போட்டிகளும் ஒட்டுமொத்த உலகமே பாராட்டும் வகையில் மிகச்சிறப்பாக அமைந்திருந்தன.  இவற்றைக் கண்டு  தமிழன் என்ற முறையில் நான் பெருமையும், பெருமிதமும் அடைகிறேன்!

செஸ் ஒலிம்பியாடையும், அதன் தொடக்க, நிறைவு விழாக்களையும் மிகச்சிறப்பாக நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் அதிகாரிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோருக்கும்,  விழாக்களை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்!

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் நிகல் சரின், அர்ஜுன்,  மகளிர் அணியில் இடம் பெற்றிருந்த வீராங்கனைகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Wish Tngovt For Chess Olympiad


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->