காஞ்சி வன்னியர் சங்கம் என்றாலே அவர் தான்., 40 ஆண்டுகளாக பயணம்.. வேதனையில் மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


மதூர் ம.குப்பன் மறைவுக்கு, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

"காஞ்சிபுரம் மாவட்டம் மதூர் கிராமத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட  வன்னியர் சங்கத் தலைவர் மதூர் ம. குப்பன் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

காஞ்சிபுரம் மாவட்ட வன்னியர் சங்கம் என்றாலே மதூர் ம.குப்பனின் பெயர் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு வன்னியர் சங்கத்திற்காகவும், கட்சிக்காகவும் கடுமையாக உழைத்தவர். 1982&ஆம் ஆண்டில் எனக்கு அவர் அறிமுகமானார். 

அதன்பின் 40 ஆண்டுகளாக தொடர்ந்து என்னுடன் பயணம் செய்தவர். வன்னியர் சங்கக் காலத்திலிருந்து இட ஒதுக்கீடு போராட்டம் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்ற தியாக வரலாறு மதூர் ம. குப்பனுக்கு உண்டு.

எந்தக் கூட்டம் நடந்தாலும் அதில் மதூர் ம.குப்பன் தெளிவாகத் தெரிவார். எப்போதும் மஞ்சள் சட்டை தான் அணிந்திருப்பார். என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருந்தவர். காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நான் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார். 

அடிக்கடி என்னுடன் பேசுவார். நேற்று மாலை கூட கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர் இன்னும் அதிக ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும். அவரது மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

குப்பனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பா.ம.க, வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Mourning to Mathur ma kuppan dead


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->