உலகுக்கு உணவு படைக்கும் உழவர்களின் வாழ்வு வளம் பெற வேண்டும் -மருத்துவர் இராமதாஸ்.!  - Seithipunal
Seithipunal


தேசிய உழவர் நாளான இன்று, உலகுக்கு உணவு படைக்கும் உழவர்களுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரின் அந்த வாழ்த்துச் செய்தியில், "தேசிய உழவர் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் உலகுக்கு உணவு படைக்க அவர்கள் செய்யும் தியாகங்களை நினைத்துப் பார்க்கிறேன்.  

அவர்களின் கோரிக்கைகள் அனைத்து நிறைவேற்றப்பட வேண்டும்; அவர்கள் வாழ்வு வளம் பெற வேண்டும் என்று கூறி வாழ்த்துகிறேன்" என்று மருத்துவர் இராமதாஸ் வாழ்த்தியுள்ளார். 

இதேபோல் பாமக தலைவர் ஜி.கே மணி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்திய நாட்டின் விவசாயியான முன்னாள் பிரதமர் சரண்சிங் பிறந்த நாள் (அவர் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததால்) டிசம்பர் 23 தேசிய விவசாயிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் மருத்துவர் அன்புமணி MP உணவளிக்கும் விவசாயிகள் என் கடவுள் என்றார். 

இந்திய நாட்டின் முது கெலும்பு விவசாயம். நாட்டில் 60% மக்களுக்கு மேல் விவசாயத் தொழிலையே நம்பியுள்ளனர். நாட்டின் முதல் தொழில், ஆதாரத் தொழில் விவசாயம் மக்கள் தொகை மிக அதிகமுள்ள நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை பெருகி வருகிறது. விளை நிலங்களின் பரப்பளவு சுறுங்கி வருகிறது. விவசாய உற்பத்தி குறைவு. உணவு பற்றாக்குறை எதிர்காலத்தில் உருவாகும். 

புயலால் பாதிப்பு, மழை வெள்ள  சேதம், வறட்சியால் பயிர்கள் பாதிப்பு , உற்பத்தி குறைவு, பாசனத் திட்டங்கள் இல்லை .உரம், மருந்து உள்ளிட்ட இடுபொருட்கள் விலை உயர்வு . விவசாயிகள் உற்பத்திக்கு கட்டுப்படியான விலை இல்லை. ஆனால் வெளியில் நுகர்வோருக்கு அதிகமான விலை உயர்வு, இது மிகப்பெரிய முரண்பாடு, கட்டுப்படியான விலை நிர்ணயம் இல்லை என்று நான் தொடர்ந்து சட்டமன்றத்தில் பேசியதால் தான் உழவர் சந்தை துவங்கப்பட்டது. இது தமிழ்நாடே அறியும். இதனால் முழுப்பயன் இல்லை. 


            
விவசாயம் செழிக்க பாசனத் திட்டங்கள் நிறைவேற்ற நதிகள் தேசிய மயமாக்கி நதிகள் இணைக்கப்பட வேண்டும். நவீன புதிய ரகங்கள் கண்டுபிடிக்க வேளாண் ஆராய்ச்சி மையங்கள் மூடப்படாமல் அதிக ஆராய்ச்சி நிலையங்கள் உருவாக்கப்படவேண்டும். விதைகள் உரம், மருந்துகள் மிகக் குறைந்த விலையில் வழங்கி உற்பத்தி செய்வதற்கு மானியம் வழங்கப்படவேண்டும். கட்டுப்படியன விலை நிர்ணயம் வேண்டும். நூகர்வோருக்கு அடக்கவிலையில் பொருட்கள் கிடைக்க வேண்டும். காப்பீட்டுத்தொகை முழு அளவில் முறையாக கிடைக்க வேண்டும். 

-->