பெண் குழந்தைகள் போற்றப்பட வேண்டியவர்கள் - தேசிய பெண்குழந்தைகள் நாள் வாழ்த்து தெரிவித்த மருத்துவர் இராமதாஸ்.!
Dr Ramadoss Wish NationalGirlChildDay
தேசிய பெண்குழந்தைகள் நாள்: பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
"இன்று தேசிய பெண்குழந்தைகள் நாள். பெண் குழந்தைகள் நமது குடும்பத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் வரங்கள்.
பெண் குழந்தைகள் போற்றப்பட வேண்டியவர்கள்.
அவர்கள் நமக்கு சுமைகள் அல்ல... சொத்துகள்.
பெண் குழந்தைகளை பெருமைக்குரியவர்களாக உயர்த்துவோம்!
பெண் குழந்தைகளுக்கு கல்வி, நல்ல உடல் நலன், நுண்ணூட்டச்சத்து, உரிமைகள், வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்குவதே மத்திய, மாநில அரசுகளின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும். அதுவே மகளிர் முன்னேற்றத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் செய்யப்படும் முதலீடு ஆகும்"
இவ்வாறு மருத்துவர் இராமதாஸ் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Ramadoss Wish NationalGirlChildDay