உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள் - மருத்துவர் இராமதாஸ்.!
Dr Ramadoss Wish Thai Poosam
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "தை மாத பூச நட்சத்திரமும் முழுநிலா பருவமும் ஒன்றாக வரும் திருநாள் தைப்பூசம். சங்க இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் போற்றப்படும், தமிழர்கள் பன்னெடுங்காலமாக கொண்டாடும் திருநாள் இதுவாகும். உலகெங்கும் வாழும் தமிழர்களை ஓரணியில் இணைக்கும் திருநாளாகவும் தைப்பூசம் உள்ளது.
தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தமிழீழம், தென் ஆப்பிரிக்கா உட்பட பல நாடுகளில் தமிழர்கள் தைப்பூசம் திருநாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்த நன்நாளில் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்."
இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Ramadoss Wish Thai Poosam