'திராவிடம்' விடுபட்ட விவகாரம் : தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய 4 பெண்களிடம் விசாரணை! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த பாடலை தூர்தர்ஷன் அலுவலகத்தில் பணிபுரியும் 4 பெண்கள் பாடிய நிலையில், நீராருங் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் என்று தொடங்கி, மூன்றாவது வரியான தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும் என்ற வரியை தவிர்த்து 4-வது வரியில் இருந்து பாடுவதை தொடர்ந்தனர்.

இந்த நிகழ்வு தமிழக அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி உள்ள நிலையில், திராவிடம் என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் இன்று  நடைபெற்ற விசாரணையில், வழக்கமாக தூர்தர்ஷனில் விழாக்கள் நடைபெறும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசை நாடக பிரிவில் உள்ள மூத்த பெண் ஊழியர் ஒருவர்தான் வழக்கமாக பாடுவார் என்பதும், ஆனால் அதற்கு மாறாக  4 பெண் ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியதும் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த 4 பெண்களிடமும் தூர்தர்ஷன் மூத்த அதிகாரிகள் அடுத்தடுத்து விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அதில் எத்தகைய விடை கிடைத்தது என்ற விவரத்தை தூர்தர்ஷன் அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dravid missing issue investigation of 4 women who sang tamil thai greetings


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->