#BREAKING || வெளியான மரணச் செய்தி., வேதனையில் மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


புதுவை தி. வெங்கடாசல கவுண்டர் மறைவுக்கு மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சற்றுமுன் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

"புதுவை மாநில வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் திலாஸ்பேட்டை தி. வெங்கடாசலக் கவுண்டர் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

புதுச்சேரி திலாஸ்பேட்டையைச் சேர்ந்த வெங்கடாசலக் கவுண்டர், வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே சமூக நலனுக்காகவும், அரசியல் அதிகாரங்களை வென்றெடுப்பதற்காகவும் நான் நடத்திய போராட்டங்களுக்கு துணை நின்றவர். புதுவை மாநில வன்னியர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டவர்; சங்கத்தை வலுப்படுத்தியவர். பதவிகளுக்கு ஆசைப்படாதவர்.

வன்னியர் சங்க காலம் தொடங்கி வாழ்க்கையின் நிறைவு வரை எனது வழியில் பயணித்தவர். என் மீது மிகுந்த அன்பும், பற்றும், மரியாதையும் கொண்டவர். அவரது மறைவு புதுவை மாநிலத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கும், வன்னியர் சங்கத்திற்கும் மிகப்பெரிய இழப்பு ஆகும்.

வெங்கடாசலக் கவுண்டரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், புதுவை மாநில வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு மருத்துவர் இராமதாஸ் அந்த இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DrRamadoss Mourning to Vengadasala gounder dead


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->