காங்கிரஸ் விலகினால் நஷ்டமில்லை.. துரைமுருகன் பேச்சால் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன.

தமிழகத்தில் ஆளும் திமுக ஆனது தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் அறிக்கை குழு, ஒருங்கிணைப்பு குழு ஆகியவற்றை அறிவித்ததோடு அதன் முதற்கட்ட பணிகளையும் தொடங்கியுள்ளது.

திமுக தொகுதி பங்கிட்டு குருவானது இன்று காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை திமுக பரிசீலனை செய்து அதன் மீது முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய சூழலில் திமுக பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக இருப்பதாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்துள்ளார். 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த வீடியோவில் அவர் "காங்கிரஸ் விலகிப் போனா போகட்டும்.. அதனால் எங்களுக்கு என்ன நஷ்டம்.. காங்கிரஸ் விளங்குவது குறித்து கவலைப்படவில்லை.... குறிப்பாக நான் கவலைப்படவில்லை.... அதனால் ஓட்டு ஒன்றும் பாதிக்காது... இருந்தால்தானே பாதிப்பிற்கு‌.." பேசி இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Duraimurugan said no loss if Congress leaves DMK alliance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->