பல கோடி ரூபாய் ஏமாற்றிய வழக்கு : திமுக அமைச்சரிடம் 4 மணிநேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை.! - Seithipunal
Seithipunal


வீட்டுவசதி வாரிய மனை ஒதுக்கீட்டில் பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில், இன்று திமுக அமைச்சர் ஐ பெரியசாமி இடம் அமலாக்கதுறையினர் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 4மணி நேரம் விசாரணைக்கு பிறகு ஐ பெரியசாமி புறப்பட்டார். 

கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், தமிழக காவல்துறையின் உளவுத்துறை ஐஜியாக இருந்த ஜாபர் செட், உண்மைகளை மறைத்து வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டை பெற்று, பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக லஞ்ச ஒழிப்புத் துறை இடம் புகார் அளிக்கப்பட்டது.

கடந்த 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்து, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கையும் தாக்கல் செய்தனர்.

2007-2008 ஆம் ஆண்டு இடைக்கப்பட்ட திமுக ஆட்சி காலகட்டத்தில் வீட்டு வசதி வாரியத்தில் ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து, அமலாக்கத்துறை தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மாதம் ஜாபர் சேட்டு இடம் அமலாக்கதுறையினர் விசாரணை நடத்தி முடித்த நிலையில், இன்று திமுக அமைச்சராக இருக்கக்கூடிய ஐ பெரியசாமி இடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

2006ஆம் காலகட்டத்தில் அப்போதைய வீட்டு வசதி வாரியத்தின் அமைச்சராக இருந்தவர் ஐ பெரியசாமி. இதன் காரணமாக தற்போது அமலாக்கதுறையினர் அவர் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ed investigation to dmk minister i periyasami


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->