#BigBreaking | அதிமுக முக்கிய புள்ளி, மூத்த தலைவரையே தட்டி தூக்கிய எடப்பாடி பழனிச்சாமி! அதிகாரபூர்வ அறிவிப்பு! அதிர்ச்சியில் ஓபிஎஸ்!
Edapaadi palanisami announcement for Pandrutti Ramachandran dismissed admk party
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிவிப்பில், "கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்;
கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், பண்ருட்டி S. ராமச்சந்திரன் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" என்று எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ச. இராமச்சந்திரனை நியமித்து, ஓ பன்னீர்செல்லம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இதன் அடிப்படையிலேயே பண்ருட்டி ச. இராமச்சந்திரனை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.
English Summary
Edapaadi palanisami announcement for Pandrutti Ramachandran dismissed admk party