நீட் ரத்து என்ற பொய்யை சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக - எடப்பாடி கே பழனிச்சாமி பிரச்சாரம்.! - Seithipunal
Seithipunal


நகர்ப்புற சட்டமன்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிசாமி இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.

அதன்படி, சேலம் மாவட்டம் தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை எடப்பாடி கே பழனிசாமி தொடங்கியுள்ளார்.

அப்போது, அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, எடப்பாடிபழனிசாமி பேசியதாவது,

"தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ள திமுக, தற்போது தமிழக மக்களை மறந்து விட்டனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று திமுக ஒரு பொய்யான வாக்குறுதி அளித்தார்கள்.

சட்டமன்ற தேர்தலின்போது பல பொய்யான திட்டங்களை அறிவித்து ஆட்சிக்கு வந்துள்ள இந்த திமுக, ஆட்சி அமைந்த எட்டு மாதங்களில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றி உள்ளனர்" என்று எடப்பாடி கே பழனிசாமி பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi k palanisamy election campaign 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->