#BREAKING : முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராதா கிரீன்வேஸ் சாலை இல்லத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

அதிமுகவில் பெரும்பாலானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுக் குழுவில் கலந்து கொண்ட கடம்பூர் ராஜுவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதால் அதை காரணம் காட்டி வரும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக் குழுவை ஒத்தி வைக்க ஓபிஎஸ் தரப்பு முயற்சித்து வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi palanisamy wife Radha affected covid positive


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->