அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு விருந்து வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் புறக்கணிப்பு..?
Edappadi Palaniswami hosts a dinner for AIADMK MLAs Sengottaiyan boycotts
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இணைந்துள்ளது.
இதனையடுத்து, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில்அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி இன்று விருந்து வழங்குகிறார். இந்த விருந்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துக்கொள்ளும்நிகழ்ச்சிகள் மற்றும் அவரிடம் பேசுவதை செங்கோட்டையன் தவிர்த்து வந்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்பட்டது. இதற்கிடையே ஈரோட்டில் கடந்த வாரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய செங்கோட்டையன், "தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்தனர். அந்த வழியில் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி செய்தார்" என்று புகழ்ந்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி வழங்கும் விருந்தில் செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். இது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
English Summary
Edappadi Palaniswami hosts a dinner for AIADMK MLAs Sengottaiyan boycotts