ரிவ்யூ கூட கேட்காமல் வெளியேறிய இஷான் கிஷன்; சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நடுவர் தீர்ப்பு..?
Ishan Kishan walked out without even asking for a review The umpire decision that raised doubts
ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதிவருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இந்நிலையில், 02-வது ஓவரில் டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் ஒரு ரன்னில் கேட்ச் ஆனார்.

தொடர்ந்து அபிஷேக் சர்மா 08 ரன்களிலும், நிதிஷ் குமார் ரெட்டி 02 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென், நிலைத்து நின்று ஆடினார். இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய அபினர் மனோகர் 37 பந்துகளில் 43 ரன்கள் அடித்தார். அரைசதம் கடந்த கிளாசன், 44 பந்துகளில் 71 ரன்கள் குவித்து கேட்ச் ஆனார்.
இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக டிரெண்ட் போல்ட் 04 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடர்ந்து 144 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி 01 விக்கெட்டினை மாத்திரம் இழந்து அதிரடி காட்டி வருகிறது.
இன்றைய ஆட்டத்தின் முதல் பாதியில், தீபக் சஹர் வீசிய 03-வது ஓவரின் முதல் பந்து இஷான் கிஷனுக்கு பின் பக்கமாக சென்றது. அதனை விக்கெட் கீப்பர் ரிக்கல்டன் பிடித்தார். அப்போது நடுவர் ஒய்டு கொடுப்பதற்காக கைகளை உயர்த்திய போது, திடீரென இஷான் கிஷன் நடக்க தொடங்கினார்.

இதனால் உடனடியாக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பவுலர் தீபக் சாஹர் ஆகியோர் அவுட் கோரிக்கை வைத்தனர். அதன்பின் நடுவர் யோசித்து கொண்டே அவரது கையை உயர்த்தி அவுட் கொடுத்தார்.
சந்தேகத்தின் அடிப்படையில் இஷான் டிஆர்எஸ் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இஷான் கிஷன் அதை கேட்காமல் உடனடியாக பெவிலியன் சென்றார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.
ஏனெனில், இஷான் கிஷனுக்கு வீசப்பட்ட பந்தை ஸ்னிக்கோமீட்டரில் சோதனை செய்தத்தில், தீபக் சஹர் வீசிய பந்து இஷான் கிஷனின் பேட்டில் மற்றும் அவரது உடம்பில் கூட படவில்லை. இதனை ஓய்வு அறையில் பார்த்து கொண்டிருந்த இஷான் கிஷன் தலையில் அடித்துக் கொண்டு தன்னை தானே திட்டிக்கொண்டார்.
இஷான் பேட்டில் படாமல் எதற்காக நடந்து சென்றார், எதற்காக டிஆர்எஸ் அப்பீல் கூட செய்யவில்லை என்ற கேள்வி மற்றும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் இஷான் கிஷனின் விஸ்வாசம் எப்போதும் அம்பானிக்கு தான் என்றும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
English Summary
Ishan Kishan walked out without even asking for a review The umpire decision that raised doubts