மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினார் அமைச்சர் அன்பில் மகேஷ்.! - Seithipunal
Seithipunal


பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இன்ஃபுளூயன்சா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு காய்ச்சல், உடல் சோா்வு இருந்ததால் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவா்களின் ஆலோசனையின்படி, அவா் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் மற்றும் இன்ஃபளுன்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். மேலும், மருத்துவர்களின் கண்காணிப்பில் நலமாக இருக்கிறார் என்றும் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்புவார் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் எச்1என்1 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Education minister anbil Mahesh discharge


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->