#BREAKING || குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. யாருக்கும் ஆதரவு இல்லை.. மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10- ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதனையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. 

இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கரும்,  எதிர்க்கட்சிகளின் சார்பில், மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வில் தங்களை யாரும் கலந்து ஆலோசிக்கவில்லை எனவும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election of Vice President No support for anyone Mamata Banerjee


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->