சுமார் 1மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை...!!! கே. என். நேரு சகோதரரிடம்....?
Enforcement Directorate conducted investigation about 1 hour K N Nehru brother
அமலாக்கத்துறையினர், தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களிலும், அமைச்சரின் மகன் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான அருண் நேருக்கு சொந்தமான இடத்திலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில் அமலாக்கத்துறை, சென்னை ஆர்.ஏ.புரத்திலுள்ள கே.என். ரவிச்சந்திரன் வீட்டில் 3 நாட்களாக நடத்திய சோதனை நிறைவு பெற்றது.மேலும் அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி சோதனைகள் முடிவடைந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு அழைத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரனவிச்சந்திரன் விசாரணைக்கு ஆஜரானார்.
மேலும், கே.என்.ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறையினர் சுமார் 1 மணி நேர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை முடிந்த நிலையில் கே.என்.ரவிச்சந்திரன் மீண்டும் அங்கிருந்து புறபட்டார்.
English Summary
Enforcement Directorate conducted investigation about 1 hour K N Nehru brother