பிரிட்டனின் உள்ளாட்சி தேர்தலில் 'தமிழன் பாப்பா வெற்றி' வெற்றி! பாமக, அதிமுக தலைவர்கள் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


கடந்த மே மாதம் 4 ஆம் தேதி இங்கிலாந்தில் நாடு முழவதும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில்,  செம்ஸ்போர்டு சிட்டியில் ஆளும் கான்சேர்வெட்டிவ் கட்சியின் சார்பாக திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், பெரும்பண்ணையூர் கிராமத்தைச் சார்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாப்பா சுப்பிரமணியன் அவர்களின் மகன் பாப்பா கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

செம்ஸ்போர்டு சிட்டியில் பொறுத்தவரை டெமோகிராட்ஸ் கட்சி மிக பலம் பொருந்திய கட்சியாக உள்ளது. அப்படிப்பட்ட டெமோகிராட்ஸ் கட்சியின் வேட்பாளர் பேட்ரிக் மேன்லியை எதிர்த்து போட்டியிட்ட தமிழன் பாப்பா வெற்றி 163 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்றில் முதல் தமிழ் செம்ஸ்போர்டு சிட்டி கவுன்சில்ராக கான்சேர்வெட்டிவ் கட்சி சார்பாக தடம் பதித்து உள்ளார்.

விலைவாசி உயர்வு மற்றும் சில காரணங்களால் ஆளும் கான்சேர்வெட்டிவ் கட்சி நாடு முழுவதும் ஒரு சிறிய பின்னடைவை சந்தித்திருக்கும் இந்த நிலையில், நம் தமிழன் பாப்பா வெற்றியின் வெற்றி ஒரு வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

பிரிட்டனை ஆளும் கான்சேர்வெட்டிவ் கட்சி பிரதமர் ரிஷி சுனக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதும், ரேடியோவை கண்டுபிடித்த மார்கோனி பிறந்த ஊர் செம்ஸபோர்டு சிட்டி என்பது குறிப்பிட தக்கது.

தன் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற வைத்த செம்ஸ்போர்டு பிரிட்டிஷ் மக்களுக்கும், இங்கு வாழும் இந்திய தமிழ் மக்களுக்கும், நண்பர்ககுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நம் தமிழன் பாப்பா வெற்றி.

மேலும், தான் பிறந்த விவசாய பூமி டெல்டா மாவட்டத்திற்கும், தமிழுக்கும், தன்னை படிக்க வைத்து ஆளாக்கிய தாய் தந்தையர் மற்றும் என் மனைவி, மகன், நண்பர்கள், அரசியல் ஆசான்கள், பெரும்பான்னையூர் கிராம மக்கள் அனைவருக்கும்  பெருமை சேர்க்க உழைப்பேன் என்று அன்புடன் நன்றி கூர்ந்துள்ளார் நம் தமிழன் பாப்பா வெற்றி.

செம்ஸ்போர்டு சிட்டி கவுன்சில்ராக வெற்றிபெற்றுள்ள தமிழன் பாப்பா வெற்றிக்கு, பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

(எடப்பாடி பழனிசாமியுடன் பாப்பா வெற்றியின் சகோதரர் Pappa Bothan Thiruvarur.)

திருவாரூரில் 1982 ஆண்டு பிறந்து, சென்னை செயின்ட் ஜோசப் இன்ஜினியரிங் டெக் தகவல் தொழில்நுட்பம் முடித்து, 2007 பிரிட்டன் ஹெரியோட் வாட் பல்கலைகலகத்தில் மாஸ்டர் பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்து, இன்று செம்ஸ்போர்டு சிட்டி கவுன்சில்ராக அரசியலில் வெற்றி கொடி நாட்டியுள்ளார் நம் தமிழன் பாப்பா வெற்றி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England Local election victory Tamilan pappa


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->