போலி மது விற்கும் திமுகவினர்.. அரசுக்கு தெரிந்தே நடக்கும் குற்றம்.. உடனே பதவி விலகுங்க.. ஈபிஎஸ் மீண்டும் வலியுறுத்தல்..!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பம்பா மேடு பகுதியில் கலாச்சாராயம் குடித்ததில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். நிலம் கலாச்சாரம் குறித்து பாதிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் "செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே பேரப்பாக்கத்தில் போலி மதுபானம் குறித்து 5 பேர் இறந்த நிலையில் பல பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரத்தில் போலி மதுபானம் விற்பனை செய்தவர் திமுகவை சேர்ந்த சித்தாமூர் ஒன்றிய கவுன்சிலர் நாகப்பனின் சகோதரர் அமாவாசை என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், அரசியல் பின்புலம் உள்ளவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி இப்படி போலி மதுபானங்களை விற்பனை செய்தால் அப்பாவி மக்கள் குடித்ததில் 5 பேர் தற்பொழுது உயிரிழந்துள்ளனர்.

அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் விற்பனை தடுப்பதற்காக கண்காணிப்பதற்காக தனியாக குழு அமைக்கப்பட்டது. எங்கள் ஆட்சியில் கள்ளச்சாராயம் போலி மதுபானம் விற்பனை செய்த செய்பவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தோம். ஆனால் இந்த இரண்டு ஆண்டு காலத்தில் கள்ளச்சாராய வியாபாரிகள் பெருகி உள்ளனர். போலி மதுபான விற்பனையாளர்கள் அதிகரித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 2000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

சுமார் 1600 பேர் கள்ளச்சாராய விற்பனை, போலி மதுபான விற்பனை வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கள்ளச்சாராய் விற்பனையும் போலி மதுபான விற்பனையும் இந்த அரசுக்கு ஏற்கனவே தெரிந்துள்ளது. காவல்துறையினருக்கும் தெரிந்துள்ளது. அதனால் தான் கடந்த 2 நாட்களில் மட்டும் 1600 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான பேர் கள்ளச்சாராயத்தையும் போலி மதுபானத்தையும் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் முழு பொறுப்பேற்று இன்றைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். ஒரு திறமை இல்லாத முதலமைச்சர், ஒரு பொம்மை முதலமைச்சர், நாட்டின் மக்கள் மீது அக்கறை இல்லாத ஒரு முதலமைச்சரால் ஏழை எளிய உழைப்பாளிகள் தங்கள் உயிரை இழந்ததால் அவர்களின் மனைவிமார்கள் தாலி இழந்த நிலையை இன்று நாம் பார்க்கிறோம்" என செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS again demand CM MKStalin need to resign


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->