தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. இவர்களின் தூண்டுதல் தான் காரணம்.. கொந்தளிக்கும் எடப்பாடி.!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் நல்ல தம்பியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருவள்ளூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் "அதிமுக பலம் வாய்ந்த கூட்டணி அமைத்ததால் ஸ்டாலின் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். 

அதிமுகவில் உள்ளவர்கள் எல்லாம் விசுவாசிகள் உழைப்பாளர்கள். ஆனால் காங்கிரசும் திமுகவும் பணக்கார கட்சி. அதிமுக சாதாரண தொண்டர்கள் நிறைந்த கட்சி. பொய் பேச நோபல் பரிசு ஸ்டாலினுக்குத் தரலாம். 

திமுகவின் மூன்று ஆண்டு ஆட்சியில் என்ன திட்டங்களை கொண்டு வந்தீர்கள்? எவ்வளவு நாட்கள் பொய் பேசுகிறீர்கள். அதற்கெல்லாம் மக்கள் பாடம் புகட்டுவார்கள். தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் இப்போது பேசி வருகிறார். சில அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் தான் துப்பாக்கி சூடு அரங்கேற்றப்பட்டது. 

மாஞ்சோலையில் படிகடி நடத்தி திமுக ஆட்சியில் தான் 18 பேர் உயிரிழந்தனர். தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து பரப்பினால் தேர்தலில் நீங்கள் தோல்விதான் அடைவீர்கள். தூத்துக்குடி மக்களின் கருத்தைக் கேட்டு ஆலையை மூடியது திமுக ஆட்சியில் தான். ஆனால் தொழில்துறை அமைச்சராக இருந்த முக ஸ்டாலின் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிக்காக நிதி ஒதுக்கி 86 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வழங்கினார் என குற்றம் சாட்டியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS alleged politics parties instigate in Thoothukudi fireing


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->