கேப்டனுக்கு "பத்மபூஷன் விருது".. அதிமுக தலைமை வாழ்த்து.!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடைபெறாத வளம் வந்த விஜயகாந்த் தன்னுடைய ரசிகர்களாலும் கட்சி நிர்வாகிகளும் அன்போடு கேப்டன் என அழைக்கப்பட்டவர். தன்னுடைய நடிப்பின் மூலம் சம்பாதித்த பணத்தை மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவு செய்ததால் அவரை கருப்பு எம்.ஜி.ஆர் என்றும் அழைப்பதுண்டு. 

அந்த அளவிற்கு பெயர் பெற்ற கேப்டன் விஜயகாந்த் தேமுதிக என்னும் அரசியல் கட்சியை ஆரம்பித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வரை உயர்ந்தவர். ஆனால் துரதிஷ்டவசமாக உடல்நல குறைவு ஏற்பட்டு கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய நிலையில் கேப்டன் விஜயகாந்த் மறைந்த பிறகும் 15 லட்சம் பேருக்கு அவரது நினைவிடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டதால் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. 

இவ்வளவு சிறப்பு மிக்க கேப்டன் விஜயகாந்த்துக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற விழாவில் விஜயகாந்த்க்கு பத்மபூஷன் விருது வழங்கப்படவில்லை. அரசியல் காரணங்களுக்காக அவருக்கு பத்மபூஷன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய இருந்த நிலையில் இரண்டாவது கட்டமாக நேற்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் விஜயகாந்த்க்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. 

விஜயகாந்த் சார்பாக அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் பத்மபூஷன் விருதை பெற்றுக் கொண்டார். இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதாக கருதப்படும் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் ககு வழங்கப்பட்டு இருப்பது அவரது பெருமைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. 

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி "பொது வாழ்வு மற்றும் கலை உலக சாதனைகளுக்கு பத்மபூஷன் விருதினை பெறும் விஜயகாந்தின் மனைவியாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eps congrats to DMDK Vijayakanth Padma Bhushan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->