விஷ சாராய பலிக்கு ஸ்டாலின் தான் பொறுப்பு.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்க ..!! - எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் "விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வம்பாமேடு கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 60 பேர் பாதிக்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் தற்பொழுது வரை 9 பேர் உயிரிழந்த உள்ளனர் என்ற செய்தி வந்துள்ளது. மேலும் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதில் பல பேர் கண் பார்வை இழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இன்னும் எத்தனை பேர் உயிரிழப்பார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 பேர் போலி மதுபானம் அருந்தியதால் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளது. ஒரு பொம்மையின் முதலமைச்சர், திறமையற்ற முதலமைச்சர் தமிழகத்தை ஆளுகின்ற காரணத்தினால் இப்படிப்பட்ட கொடுமைகள் எல்லாம் மக்கள் சந்திக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருகி உள்ளது என்பதை சட்டமன்றத்தில் காவல்துறையின் மானிக் கோரிக்கையின் பொழுது தெரிவித்திருந்தேன். அதன்மீது தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற சம்பவங்களை தடுத்திருக்கலாம்.

மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக பல செய்திகள் வெளிவந்துள்ளன. அப்போதாவது இந்த அரசாங்கம் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்தி இருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது. இதற்கெல்லாம் முழு பொறுப்பு தமிழகத்தின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தான். எனவே மு.க ஸ்டாலின் தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS insists CM MKStalin should resign from his post


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->