த.வெ.க வை பற்றி விமர்சிக்க கூடாது - நிர்வாகிகளுக்கு எடப்பாடி உத்தரவு..!
eps order to excuetives no criticize to tvk
அரசியல் களத்துக்கு புதிதாய் வந்துள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடத்தினார். .
அந்த மாநாட்டில் பேசிய விஜய், ''2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது உறுதி. என்றாலும், கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களிப்பு வழங்கப்படும்'' என்று வெளிப்படையாக அறிவித்தது அனைத்து கட்சியினரையும் திரும்பி பார்க்க வைத்தது.
இந்த நிலையில், வரும் 6-ந்தேதி சென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், சட்டசபை தேர்தலை வலுவாக எதிர்கொள்ளும் வகையில் கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
இதற்கிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் மாநில நிர்வாகிகளுக்கும், செய்தி தொடர்பாளர்களுக்கும் வாய்மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது, பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகிய நன்கு கட்சிகளை விமர்சித்து கருத்து தெரிவிக்க கூடாது.
'அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை'. தேர்தல் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், முன்கூட்டியே அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த உத்தரவு அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
eps order to excuetives no criticize to tvk