ஓபிஎஸ் டெல்லியின் செல்லப்பிள்ளை..!! பாஜகவின் ஆதரவு அவருக்கு தான்..!! இபிஎஸ் ஆதரவாளர் கடும் விமர்சனம்..!!
EPS Supporter Criticism OPS was Delhi BJPs lovable person not ADMK
தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் சுரேஷ் கண்ணன் ஓபிஎஸ் டெல்லியின் செல்லப்பிள்ளை என பேசியுள்ளார். அந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு "டெல்லி பாஜகவின் செல்ல பிள்ளையாக ஓபிஎஸ் இருக்கிறார்" என பேசிய கருத்திற்கு இபிஎஸ் தரப்பை சேர்ந்த சுரேஷ் கண்ணன் ஆதரவாகப் பேசி உள்ளார்.
இது குறித்து பேசி அவர் "தனியரசு சொல்வது நியாயமான கருத்து தான். டெல்லியின் தனிப்பட்ட ஆதரவு அண்ணன் ஓபிஎஸ்-க்கு உண்டு. ஆனால் அதிமுகவிற்கு ஓபிஎஸ் செல்லப்பிள்ளை இல்லை. எங்கே சசிகலா முதலமைச்சர் ஆகிவிடுவாரோ என அதிமுகவிலிருந்து பிரிந்து போய் முதலில் குரல் கொடுத்தவர் ஓபிஎஸ்.
அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களை தேனி மாவட்டத்திலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தால் கூட்டி வர முடியுமா? 10 பொதுக்குழு உறுப்பினர்களை கூட்டி வந்து அவரால் ஆதரவை நிருபிக்க முடியுமா.? ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனாதையாக தனியாக நின்று கொண்டிருக்கின்றனர். அதனால் தான் டெல்லியில் பாஜகவிடம் கையேந்தி நிற்கின்றனர். பாஜக சொல்வதைக் கேட்கும் இவர்கள் எப்படி அதிமுகவை காப்பாற்ற போகிறார்கள். பாஜகவின் துண்டை போட்டுக் கொண்டு ஓபிஎஸ் பாஜகவில் சேர்ந்து விடலாம்" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
EPS Supporter Criticism OPS was Delhi BJPs lovable person not ADMK