சென்னை : மருத்துவர் கத்திக்குத்து!...இளைஞர் விக்னேசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விவகாரத்தில், இளைஞர் விக்னேஷ் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, அங்கு பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜிக்கு கத்தி குத்து நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கத்தியால் குத்திய விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், மருத்துவமனையை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

அரசு மருத்துவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய விக்னேஷ் மீது கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து இளைஞர் விக்னேஷ் தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதி, விக்னேஷ் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai doctor stabbed court issued action order to youth vignesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->