சென்னை: 28 மின்சார ரயில்கள் தற்காலி ரத்து: கூடுதலாக மாநகரப் பேருந்துகள் இயக்கம்! - Seithipunal
Seithipunal


சென்னை கடற்கரை - திருமால்பூர் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கூடுதலாக மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்துள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேற்கண்ட இடங்களில் இருந்து கடற்கரைக்கு வரும் ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. புதிய நேர அட்டவணை இன்று (நவ. 22) முதல் அமலுக்கு வருகிறது எனவும், 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுள்ளது.

இதன்காரணமாக, மாநகர போ, கழகம் வழக்கம்போல் பிராட்வே இருந்து தாம்பரம் வழியாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகளை பிராட்வே முதல் தாம்பரத்திற்கும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகளை தாம்பரம் முதல் செங்கல்பட்டுக்கும் ஆக மொத்தம் கூடுதலாக 20 பேருந்துகள் பயணிகள் நலன் கருதி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணிகளின் எண்ணிக்கை இவ்வழித்தடங்களில் அதிகரிப்பதை பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Transport Announce


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->