அதிமுகவிற்கு ஆதரவா? யாருக்கு ஆதரவு? டிடிவி தினகரன் அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் ஆதரவில்லை என்று, டிடிவி தினகரன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கிய நிலையில் நேற்றுடன்  முடிவடைந்தது.

இதில், அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட 80 வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரியால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அமமுக வேட்பாளர் சிவ பிரசாந்தின் வேட்பு மனு தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

இதற்கிடையே, அமமுக-விற்கு  தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் ஒதுக்காததால், இடைத்தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.

இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பீர்களா? என்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்க்கு அவர், "திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் ஆதரவில்லை. அமமுக தொண்டர்களுகு தெரியும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று. 

எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் இரட்டை இலை சின்னம் இருப்பதால் மட்டுமே வெற்றி பெற்று விட முடியாது. திமுகவை வீழ்த்த வேண்டும் என களமிறங்கினோம். சின்னம் கிடைக்காததால் தேவையற்ற குழப்பம் வேண்டாம் என்பதால் விலகியுள்ளோம். 

தேர்தலில் போட்டியிடாததற்கு வேறு எந்த காரணமும் இல்லை. பாஜக ஆதரவு கோரினால் அப்போது அது குறித்து பேசுகிறேன். அது குறித்து யாரும் என்னிடம் பேசவும் இல்லை. 

இன்று அல்லது நாளை அமமுக வேட்பாளர் சிவ பிரசாந்த் வேட்புமனுவை வாபஸ் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode By Election AMMK Support ADMK or DMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->