மொத்தம் 5 வாக்குப்பதிவு எந்திரங்கள்! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நடக்க உள்ள சுவாரசிய சம்பவம்! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 75 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதால், ஒவ்வொரு வாக்கு சாவடியில் மொத்தமாக 5 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளது.

கடந்த மாதம் 31-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கி, 7-ம் தேதி நிறைவடைந்தது. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவன் களமிறங்கியுள்ளார்.

அதிமுக தரப்பில் தென்னரசு களமிறக்கப்பட்டுள்ளதால் தேர்தல் காலம் சூடு பிடித்துள்ளது. மேலும், தேமுதிக, நாம் தமிழர் கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 96 பேர், 121 மனுக்களைத் தாக்கல் செய்து இருந்தனர்.

வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மொத்தம் 8 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர்.

இறுதியாக ஈரோடு கிழக்கு தொகுதியில் 75 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் மொத்தமாக 5 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளதாக தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode By Election Polling machine info


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->