ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தொடங்கியது வாக்குப்பதிவு! வாக்களிக்கும் 256 பேர்! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் மாதம் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது, 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கைக் நடைபெற உள்ளது.

இரு தின்ணங்களுக்கு முன் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்தம் 46 பேர் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

களத்தில் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். 

46 பேர் களத்தில் நின்றாலும் திமுக, நாம் தமிழர் கட்சி இடையேயான இருமுனை போட்டியாக இந்த தேர்தல் அமைந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை முதல் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் தபால் வாக்களிக்க மொத்தம் 256 பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், அவர்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

erode by election postal vote


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->