கள்ளநோட்டு கொடுத்து காய்கறி வாங்கிய நபர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அருகே மருதம்நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் மகன் முகமது சமீர். இவர் அப்பகுதியில் உள்ள மெயின்ரோட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். 

இவரது கடைக்கு நேற்று கடையம் அருகே உள்ள ஆழ்வான் துலுக்கப்பட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த களஞ்சியம் என்பவரது மகன் ஆசைத்தம்பி என்பவர் வந்து 100 ரூபாய் நோட்டு ஒன்றை கொடுத்து காய்கறி கேட்டுள்ளார். அந்த நோட்டை வாங்கிய முகமது சமீர், அதில், சந்தேகம் ஏற்பட்டு அருகிலுள்ள ஒருவரிடம் காட்டியுள்ளார். அப்போது ஆசைத்தம்பி கொடுத்தது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது.

இதையறிந்த ஆசைத்தம்பி அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். உடனே அவரை முகமது சமீர் அருகிலிருந்தவர் உதவியுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார் ஆசைதம்பியிடம் விசாரணை நடத்தியதில் அவர் தனது வீட்டில் ஜெராக்ஸ் எந்திரம் வைத்து கலர் தாளில் கள்ள நோட்டு அச்சடித்து அந்த நோட்டை கடைகளில் பொருட்கள் வாங்கி கொண்டு புழக்கத்தில் விட்டு வந்தது தெரியவந்தது.

அதன் படி போலீசார் ஆசைதம்பியின் வீட்டுக்கு சென்று சோதனை செய்ததில் ஒரு ஜெராக்ஸ் எந்திரம், 100 ரூபாய் கள்ள நோட்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் ஆசைத்தம்பி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for fake money making in tirunelveli


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->