நோட்டாவிடம் மண்ணை கவ்விய வெண்ணிலா! மூன்றாவது இடம் பிடித்து நோட்டா அசத்தல்!
Erode East Election 2025 Nota
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 46 வேட்பளர்கள் போட்டியிட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்றுகாலை 8 மணிக்கு தொடங்கியது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் திமுக முன்னிலை பெற்றது. அடுத்து வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
மொத்தம் 17 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கையில் தற்போதுவரை 6 சுற்றுகள் முடிந்துள்ளன. இதில்,
திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் 43624 வாக்குகள் பெற்றுள்ளார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 9165 வாக்குகள் பெற்றுள்ளார்.
நோட்டா (None of the Above) 769 வாக்குகள் பெற்றுள்ளது,.
பெரியார்வாதிகள், திருமுருகன் காந்தி ஆதரவு அளித்த வேட்பாளர் வெண்ணிலா 48 வாக்குகள் பெற்றுள்ளார்.
English Summary
Erode East Election 2025 Nota